top of page

உங்களை நம்பிதான் உங்கள் குடும்பம் இருக்கு… முதல்ல இதைப் படிங்க!

  • Writer: இன்சூரன்ஸ் தமிழா
    இன்சூரன்ஸ் தமிழா
  • Jun 6
  • 1 min read

நம்ம வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு common goal என்னனா — நம்ம குடும்பம் நல்லா இருக்கணும், பாதுகாப்பா இருக்கணும்.நம்ம இல்லாத நேரத்திலும் அவர்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்பதுதான்.

ஆனா ஒரு கேள்வி…நம்ம குடும்பத்துக்காக நாம உண்மையிலேயே தயாரா?



வாழ்க்கை எப்போதும் நம்ம plan பண்ணுற மாதிரி இருக்காது.எதிர்பாராத உடல்நல பிரச்சனை, விபத்து, வேலை இழப்பு அல்லது வேறு சூழ்நிலைகள் வந்தா… குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்படலாம்.

அதனால்தான் Insurance என்பது செலவு இல்லை… அது குடும்பத்துக்கான பாதுகாப்பு. Insurance ஏன் முக்கியம்?


1. குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பு

உங்களை நம்பி குடும்பம் இருந்தா, உங்கள் வருமானம் நிற்கும் நேரத்திலும் குடும்பம் திணறாமல் இருக்க Insurance உதவும்.


2. மருத்துவ செலவுகளை சமாளிக்க

இப்போ medical expense நாளுக்கு நாள் அதிகமா இருக்கு. ஒரு health emergency வந்தா சேமிப்பு முழுக்க போகலாம். சரியான insurance இருந்தா அது ஒரு support ஆக இருக்கும்.


3. மனநிம்மதி தரும்

நாளைக்கு என்ன ஆகும் என்று பயப்படாமல், “என் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும்” என்ற நிம்மதி கிடைக்கும்.


4. Financial Planning-க்கு உதவும்

Insurance மற்றும் investment இரண்டும் வேற. முதலில் protection, அப்புறம் wealth creation. இந்த அடித்தளம் முக்கியம்.



Insurance எடுக்கும்போது கவனிக்க வேண்டியது

✔ குடும்பத்தின் தேவையை புரிந்து கொள்ளுங்கள்

✔ வருமானத்திற்கு ஏற்ற coverage தேர்வு செய்யுங்கள்

✔ Terms & conditions படியுங்கள்

✔ நம்பகமான ஆலோசனையுடன் முடிவு செய்யுங்கள்


கடைசியாக…

நம்ம குடும்பத்துக்காக நாம உழைக்கிறோம்.ஆனா நம்ம இல்லாத நேரத்திலும் குடும்பம் நிம்மதியா வாழ என்ன செய்திருக்கோம்?


உங்களை நம்பிதான் உங்கள் குடும்பம் இருக்கு… அதனால முதலில் பாதுகாப்பை உருவாக்குங்கள். Insurance என்பது பயம் காரணமாக எடுப்பது இல்லை… பொறுப்புணர்வுக்காக எடுப்பது.



Disclaimer: Insurance வாங்கும் முன் policy terms, coverage, exclusions மற்றும் உங்கள் தேவைகளை கவனமாக மதிப்பீடு செய்யுங்கள்.

1 Comment


Jo's Corner
Jo's Corner
Jun 06

Very useful information

Like
bottom of page